உணவு குழாயில் சிக்கிய ஹேர்கிளிப்…! “என் மகள் படும் வேதனையை பார்க்க முடியல…” கதறும் தந்தை… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

தமது மகளுக்கு அறுவைசிகிச்சை முடிந்த பிறகு வாய் வழியாக லேரிஞ்சியல் குழாய் செலுத்தப்படும் பதைபதைக்கும் காட்சியைக் கண்டு மனமுடைந்து தந்தை ஒருவர் எக்ஸ் தளத்தில் இட்ட உருக்கமான பதிவு சோஷியல் மீடியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியின் உணவு குழாயில் ஹேர்கிளிப் சிக்கியுள்ளது.

தனது மூத்த மகளுக்கு மயக்க மருந்துத் தெளிவுக்குப் பின் தொண்டைக்குள் குழாய் செலுத்தப்படுவதைப் பார்த்துத் தாங்க முடியாமல் கதறி அழுததாகத் தந்தை பதிவிட்டுள்ளார். மேலும் மகள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்ட அந்தப் பதிவு மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

அதேவேளையில், இது லேரிஞ்சியல் இன்டுபேஷன் அல்ல; எண்டோஸ்கோப் மூலமாக வெளிப்பொருளை அகற்றும் சிகிச்சை என்றும், வீடியோவைக் கண்டு தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவ நிபுணர்களும் நெட்டிசன்களும் சுட்டிக்காட்டி விவாதங்களை மேற்கொண்டு வருகின்றனர்.