எந்த வேடம் கொடுத்தாலும் கலக்குவேன்… வில்லன் to ஹீரோவாக ஜொலித்த கரண்… இப்ப என்ன ஆனார்?

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில், குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு இடத்தில் இருந்தவர் நடிகர் கரண். குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப் படங்களில் நடித்தவர். தமிழில் தியாகராஜன் நடித்த தீச்சட்டி கோவிந்தன் தமிழில் இவரது முதல் படம். அந்த படத்தில் அவர் உதவியாளராக தோன்றினார். பின்னர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தில் சரத்பாபுவின் மகனாக நடித்தார். அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு நடித்த நம்மவர் திரைப்படம்தான் அவரை பிரபலம் ஆக்கியது.

நம்மவர் படத்தில், கமலை எதிர்க்கும் ஒரு வில்லன் கேரக்டரில் நடிக்க கமல், கரணுக்கு வாய்ப்பளித்தார். நம்மவர் படத்தை தொடர்ந்து ராமன் அப்துல்லா, கண்ணெதிரே தோன்றினாள் என 90 களிலும் 2000களின் தொடக்கத்திலும் பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் வேடத்திலும் நடித்து வந்தார். நம்மவர், காதல் கோட்டை, கண்ணாத்தாள், காதல் மன்னன் என பல படங்கள் அவருக்கு அடையாளத்தைப் பெற்றுத் தந்தன.

   

2006 ஆம் ஆண்டு வெளியான கொக்க்கி மற்றும் கருப்பசாமி குத்தகைதாரர்  ஆகிய இரு படங்களும் அவரை ஹீரோவாக்கின. கருப்பசாமி குத்தைகதாரர் திரைப்படம் வெற்றி பெற தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை.

அதனால் அவர் திரும்ப வில்லன் வேடத்திலும் நடிக்கவிரும்பாமல் சினிமாவை விட்டு விலகிவிட்டார். சில ஆண்டுகளாக அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. இதுபற்றி சமீபத்தில் வெளியான தகவலின் படி கரண் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறாராம்.

தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருவேன் என்று உறுதியளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இடையில் கரணின் வில்லத்தனமான நடிப்புகள் அடங்கிய காட்சித் துணுக்குகள் இணையத்தில் வைரலாகி அவருக்கென்றே ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.