பாக்க Ladies Watch போல இருக்கு… இது போயி இத்தனை லட்சமா…?  வியக்க வைக்கும் நடிகர் கமல்ஹாசனின் watch விலை…

By Begam on கார்த்திகை 7, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். தற்பொழுது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் . விரைவில் இத்திரைப்படம் ரிலீஸாக உள்ளது. அதோடு மட்டும் இன்றி அரசியலிலும் மிகவும் முனைப்புடனும் செயல்பட்டு வருகிறார் நடிகர் கமலஹாசன். இதைத்தொடர்ந்து அவர் பல திரைப்படங்களிலும் கமிட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

   

இறுதியாக பிக் பாஸில் போட்டியாளர் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இதனால் தற்பொழுது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் கமலஹாசன். உலகநாயகன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, கமல் 233, கல்கி, கமல் 234 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கமல் ஹாசனின் 234 படத்தை மணி ரத்னம் இயக்குகிறார்.  இப்படத்திற்கு’ Thug life ‘ என பெயரிடப்பட்டு டைட்டில் கூட நேற்று வெளியானது.

   

 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அணிந்துருக்கும் வாட்சின் விலை குறித்த விவரங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் ரோபோசங்கர் நடிகர் கமலஹாசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த புகைப்படத்தில் கமல்ஹாசன் அணிந்திருந்த வாட்சின் விலை குறித்த தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இந்த வாட்ச் விலை மட்டும் கேட்டீங்கன்னா சும்மா அசந்து போயிடுவீங்க. ஆமாங்க. இந்த வாட்சின் விலை மட்டும் ரூ. 12, 80,000. மேலும் இந்த வாட்ச்  jaeger Le Coultre Reverso Q3988482 வகையை சேர்ந்தது என்றும், இது reversible watch என்றும் கூறப்படுகிறது.