#image_title
தமிழ் சினிமாவில் ஆண்டவர் என்கின்ற செல்ல பெயரால் உலகநாயகன் என்கின்ற அந்தஸ்துடன் தற்போது வரை கலக்கி வருபவர் நடிகர் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக தனது திரைபாயணத்தை தொடங்கிய கமலஹாசன் தற்போது வரை தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக வளம் வரும் கமலஹாசன் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சாதனையை படைக்க இருக்கின்றார். விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமலஹாசனின் மார்க்கெட் படு வேகத்தில் உயர்ந்திருக்கின்றது. தற்போது கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி படத்தில் கமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 27ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதே மாதத்தில் இந்தியன் 2 திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் அது ஜூலை மாதத்திற்கு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது.
இதைத்தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு கமலஹாசன் நடிக்கப் போகும் திரைப்படம் தக் லைப். நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி அமைவதால் ரசிகர்களிடையே மிகவும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் ஆறு மாதத்திற்குள் கமலஹாசன் அவர்களின் மூன்று படங்கள் வெளிவருவது என்பது மிகப்பெரிய விஷயமாகும்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நடக்காத ஒரு நிகழ்வு இது. 1989 ஆம் ஆண்டு மட்டுமே இவரின் மூன்று படங்கள் ஆறு மாதத்திற்குள் வெளியாகிறது. மலையாளத்தில் சங்கையன், தமிழில் வெற்றி விழா, தெலுங்கு என படங்கள் வெளியாகிய கமலஹாசனுக்கு வெற்றிகரமாக அமைந்தது. அதை தொடர்ந்து 35 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.
இந்த மூன்று திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் என பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். கல்கி மற்றும் இந்தியன் 2 திரைப்படம் முடிந்துவிட்ட நிலையில் தக் லைப் படத்தின் ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. குறிப்பிட தேதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகிவிட்டால் இந்த அதிசயம் கட்டாயம் நடக்கும்.
இது தமிழ் சினிமா உலகிற்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும். தற்போதுள்ள நடிகர்கள் ஆண்டுக்கு ஒரு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி வரும் நிலையில் கமலஹாசனின் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாவது மிகப்பெரிய விஷயம்தான். தமிழில் தற்போது டாப் நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய் கூட வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு திரைப்படங்கள் என்று நடித்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த தலைமுறை காணாத ஒரு அதிசயம் தான் இது என்று சினிமா ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…
தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் வடக்கு…
டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்…