கோலிவுட் கொண்டாட தவறிய பிரபல நடிகர் காலமானார்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…

By Begam on கார்த்திகை 2, 2023

Spread the love

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஜூனியர் பாலையா. இவர்  ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன், சின்னத்தாயி, சங்கமம், வின்னர், சாட்டை, புலி, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

   

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் தான் அவர் கடைசியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘முகிலன்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

   

 

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால்பதித்து கலக்கியவர் நடிகர் ஜூனியர் பாலையா. இப்படி சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் வலம் வந்த ஜூனியர் பாலையா இன்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

  

இவரது இறப்புக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இச்செய்தியினை அறிந்த ரசிகர்களும் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர். தற்பொழுது கோலிவுட் கொண்டாட தவறிய நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜூனியர் பாலையாவின் இறப்பினால் மொத்த திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.