தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவருடைய நடிப்பில் பிரதர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சினிமாவில் பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் தனது தந்தை ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்தார்.இந்த நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஆர்த்தி ஜெயம் ரவி தன்னுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவு எனவும் இதில் குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் பிரபல youtube சேனலுக்கு ஜெயம் ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை மற்றவர்கள் பேசுவதை நான் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அது கொஞ்சம் மட்டுமே என்னை பாதிக்கும்.
என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யாரும் பேச வேண்டாம். அது நான் முடிவு எடுத்துப்பேன் இல்ல நாங்க முடிவெடுத்துப்போம். சினிமாவை பொறுத்த வரையில் என் மீது ஏதாவது தவறு இருந்தால் அதைக் கேட்டு அப்படியே நான் திருத்திக் கொள்வேன். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அது என்னுடைய முடிவு, இத பத்தி அவ்வளவு பெருசா யாரும் பேச வேண்டாம், அவங்க பேசுறது என்ன ஏதும் பாதிக்காது என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும்…
தமிழ்நாட்டில் 16 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் அதிவேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த…
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பண்டிகைக் கால முன்பணமாக ரூ.20,000 வழங்கிட அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள செய்தி தொழிலாளர்கள் மத்தியில்…
விலைவாசி உயர்வால் பொதுமக்கள் சந்தித்து வரும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலமாகவே…
ஹைதராபாத் ஐஎஸ் சதன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 வயதான இசானுதீன் என்ற சிறுவன், தனது பெற்றோருடன் சாட் உணவகம்…
நள்ளிரவு நேரத்தில் களைப்பாக இருந்த தாய் ஒருவர் தனது மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது சிறிய மகள் தானும்…