#image_title
உடல் நலம் மிகவும் முக்கியமானது. நம் உடல் நன்றாக இருந்தால் தான் நமக்கு தேவையானவற்றை செய்ய முடியும். நோயின்றி வாழ்தலே குறைவற்ற செல்வம் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு சிலருக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போகும். ஏதோ ஒரு காரணத்தினால் நோய்வாய்ப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்று மருத்துவர்கள் கூறுவார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடல் நன்றாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இனி காண்போம்.
நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால்தான் பல்வேறு நோய் தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும். ஏதாவது ஒரு நோய்க்கிருமி நம் உடலுக்குள் நுழைந்தால் நம் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே கிருமிகளை தாக்கி வெளியேற்றி விடும். அதனால் நம் உடம்பில் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும்.
நம் உடம்பில் நோயை எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த பழங்கள் அல்லது உணவுகளை சாப்பிட வேண்டும். இது வெள்ளை ரத்த அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்ய வைக்கும். இது தொற்று நோய்களை எதிர்த்து போராடுவதற்கு மிகவும் முக்கியமானது ஆகும்.
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை பழங்கள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். மஞ்சளில் குர்க்குமின் என்ற பொருள் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதனால் அவ்வப்போது சாப்பிடும் உணவுகளில் மஞ்சளை சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் கலந்த பாலை குடிப்பது மிகவும் நல்லது.
பச்சை காய்கறிகளான பிரக்கோலி கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் பல இரும்பு சத்துக்கள் வைட்டமின் சத்துக்கள் இருக்கின்றன. வைட்டமின் டி நிறைந்த தயிர், நோயை எதிர்த்து போராட இஞ்சி, பூண்டு, கிரீன் டீ, பாதாம், கிவி, பப்பாளி, மீன் முட்டை போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நல்ல உணவு பழக்கத்துடன் தினமும் சிறந்த வாழ்க்கை முறையும் செயல்பாடுகளும் அவசியம். தேவையற்ற கொழுப்புகளை உடம்பில் சேர விடாமல் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம் . ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டாலே நம் உடம்பில் ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும் செயல்பட ஆரம்பித்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…