தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வேற லெவல் ஆல்பத்தை கொடுத்திருந்த இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராகவும் தற்போது மிக சிறந்த நடிகராகவும் உருவாகி இருக்கின்றார். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகன்தான்.
சிறுவயதிலேயே ஏ ஆர் ரகுமான் இசையில் சில பாடல்களில் அவரது மழலை குரல் ஒலித்து இருக்கிறது. தற்போது முன்னணி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.முதலில் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு வெயில் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். அதன்படி பொல்லாதவன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ராஜா ராணி, ஆடுகளம், சூரரைப் போற்று உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள தங்கலான் மற்றும் அமரன் திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். மறுபக்கம் சினிமாவில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் ஜிவி பிரகாஷ் கலக்கி கொண்டிருக்கிறார். கடைசியாக அமரன், லக்கி பாஸ்கர் படங்களுக்கு இசையமைத்து செம ஹிட் ஆனது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். இப்படியான நிலையில் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், தாண்டவம் திரைப்படம் தான் நான் இசையமைத்த 25வது திரைப்படம். என்னுடைய 25 ஆவது திரைப்படம் என்பதால் ஒரு போட்டோ ஷூட் பண்ணி எல்லா இடத்திலும் போஸ்டர் ஒட்டுனாங்க. தமிழ்நாடு ஃபுல்லா அந்த போஸ்டர் ஒட்டி இருந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் சார் எதர்ச்சியா ரோட்ல போகும்போது அந்த போஸ்டரை பார்த்துட்டு இவரு ஹீரோவா நடிச்சா நல்லா இருக்கும் என்று சொல்லிட்டு எனக்கு போன் பண்ணாரு.
என்ன சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் சரின்னு நான் சொல்லிட்டேன். உடனே ஆபீஸ்க்கு வந்தாரு. ஒரு கதை இருக்கு அதுல ரெண்டு ஹீரோ நீங்க பண்ணா கட்டாயம் நல்லா இருக்கும் என்று சொன்னாரு. இல்ல சார் எனக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்ல என்று நான் சொன்னதும் இல்ல உங்க போஸ்டர் லுக் நல்லா இருக்கு நீங்க ஹீரோவா பண்ணா நல்லா வருவீங்க என்று சொன்னார். நானும் சரி என்று சொல்லிட்டேன். நான் ஹீரோவா நடிக்க ஓகே சொல்லிட்டேங்கிற செய்தி மட்டும் வெளியில் வந்துச்சு.
ஆனா ஏ ஆர் முருகதாஸ் சார் கமிட் பண்ண அந்த கம்பெனி கூட ஏதோ ஒரு பிரச்சனை நடந்ததால அந்த படம் அப்படியே நின்னுருச்சு. அதுக்கப்புறம் எனக்கு படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வந்துச்சு. அந்த சமயத்துல தான் ஞானவேல் ராஜா சார் டார்லிங் படத்தோட வாய்ப்பு எனக்கு கொடுத்தாரு. வேற ஒரு நடிகர் இந்த படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னதுனால என்கிட்ட அந்த ஹீரோ வாய்ப்பை கொடுத்து நடிக்க வச்சாங்க. இதுதான் என்னுடைய முதல் படம் என்று ஜிவி பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…
சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…