தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். அதன் பிறகு நடிப்பு துறையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக படங்களில் நடிக்க தொடங்கினார். இசையமைப்பதில் மட்டும் முழு கவனத்தை செலுத்தாமல் தொடர்ந்து படங்களிலும் அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இவரது திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு வெற்றியை கொடுத்ததா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான்.

ஆனால் இவரது பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது. தற்போது எல்லாம் தமிழ் சினிமாவில் நடிகர்கள் நடிகர்களாக மட்டுமில்லாமல் இயக்குனர்களாகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது பல பாடல்களை எழுதி கவிஞராக மாறிவிட்டார். அதேபோல இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நடிகராகவும் மாறி இருக்கிறார்.

அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் ஜிவி பிரகாஷ். ஜிவி பிரகாஷ் தன்னுடைய 25 ஆவது படமான கிங்ஸ்டன் என்ற புதிய படத்தின் துவக்க விழாவில் நடிகர் கமலஹாசன் பங்கேற்று படப்பிடிப்பை துவங்கி வைத்தார். இந்நிலையில் தற்போது அவர் இந்திய வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

netflix ott நிறுவனம் இந்த வெப் சீரியஸை தயாரிக்கின்றது. இந்த வெப் சீரியஸை இந்தி இயக்குனர் அனுராக் காசிப் இயக்க இருக்கிறார். இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார். ஜிவி பிரகாஷ் இந்தி வெப் சீரியஸில் நடிப்பது தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் சம்பளம் மட்டும் ஆறு கோடியாம்.
