பிரபல நடிகரான கின்னஸ் பக்ரு ஏழாம் அறிவு, காவலன், டிஷ்யூம், பஹீரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட இவர் மலையாளத்தில் உருவான குட்டியும் கோலும் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார். மற்ற மனிதர்களை விட இவர் சற்று உயரம் குறைவாக இருப்பதால் அதனை வைத்து மற்ற காமெடி நடிகர்கள் அவரை படங்களில் கலாய்த்தனர்.
ஆனால் நடிப்பதற்கு திறமை மட்டும் இருந்தால் போதும் உயரம் தேவையில்லை என நிருபித்து காட்டி கின்னஸ் ரெக்கார்டிலும் சாதனை படைத்தவர் பக்ரு. உயரம் குறைந்த நடிகர்களை வைத்து உருவாக்கி இருந்த அல்புத தீபு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் இந்த வருடம் ஜீவா நடிப்பில் வெளிவந்த அகத்தியா திரைப்படத்தில் நடித்திருந்தார். பக்ருவுக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது குடும்பத்துடன் சென்று BMW கார் ஒன்றை வாங்கியுள்ளார். BMWநிறுவனத்தின் 520D சீரியஸ் என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை சுமார் 60 முதல் 70 லட்சம் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர் வாங்கியது புது கார் அல்ல, பயன்படுத்திய கார் தான். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் பக்ரு வெளியிட தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது .
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…
"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…
"கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த 2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது. பல்வேறு…
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், த.வெ.க ஆட்சியை 'நடிகன் கட்சி' என நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும்,…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கும் எதிர்க்கட்சித்…