விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கிய நடிகர் கின்னஸ் பக்ரு… இத்தனை லட்சமா..? வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on ஆடி 19, 2025

Spread the love

பிரபல நடிகரான கின்னஸ் பக்ரு ஏழாம் அறிவு, காவலன், டிஷ்யூம், பஹீரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட இவர் மலையாளத்தில் உருவான குட்டியும் கோலும் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார். மற்ற மனிதர்களை விட  இவர் சற்று உயரம் குறைவாக இருப்பதால் அதனை வைத்து மற்ற காமெடி நடிகர்கள் அவரை படங்களில் கலாய்த்தனர்.

 

   
View this post on Instagram

 

A post shared by LUXE MOTO (@luxemoto.in)

ஆனால் நடிப்பதற்கு திறமை மட்டும் இருந்தால் போதும் உயரம் தேவையில்லை என நிருபித்து காட்டி கின்னஸ் ரெக்கார்டிலும் சாதனை படைத்தவர் பக்ரு. உயரம் குறைந்த நடிகர்களை வைத்து உருவாக்கி இருந்த அல்புத தீபு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் இந்த வருடம் ஜீவா நடிப்பில் வெளிவந்த அகத்தியா திரைப்படத்தில் நடித்திருந்தார். பக்ருவுக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது குடும்பத்துடன் சென்று BMW கார் ஒன்றை வாங்கியுள்ளார். BMWநிறுவனத்தின் 520D சீரியஸ் என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார்.  இந்த காரின் விலை சுமார் 60 முதல் 70 லட்சம் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர் வாங்கியது புது கார் அல்ல, பயன்படுத்திய கார் தான். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் பக்ரு வெளியிட தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது .