தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை இல்லாமல் சில மாநிலங்களில் அதிகமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் குறைவான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடந்த மூன்று நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் ஆறுகளின் நீர்மட்டம் ஆனது உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கைமூரில் உள்ள பகவன்பூரில் 160 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு 40 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் திறந்தவெளியில் வேலை செய்யும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
