தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் ஞானசம்பந்தம். இவர் பல்வேறு திரைப்படங்களுக்கு குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பிரபலமானவர். இவர் நடிகர் என்பதையும் தாண்டி தமிழ் திரைத்துறை பேராசிரியர், நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என்று பல துறைகளில் புகழ்பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்திர நடிகர். பல்வேறு திரைப்படங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்து பெயர் எடுக்கக் கூடியவர்.
பல்வேறு பட்டிமன்றங்களில் இவர் பரபரப்பு பேச்சாளராக சிரிப்பூட்டும் பேச்சாளராகவும் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். விருமாண்டி, இதய திருடன், கைவந்த கலை, ஆயுதம் செய்வோம், சிவா மனசுல சக்தி, போராளி, குட்டி புலி, ரஜினி முருகன், சண்டக்கோழி 3 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். தற்போதும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவ்வாறு பட்டிமன்றங்களிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
இப்படியான நிலையில் இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இனோவா கார் வாங்கி விருது வாங்கிய சம்பவத்தை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில், ஆரம்பத்தில் என்கிட்ட வண்டி இல்லாத அப்போ நைட்டு முழுவதும் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து கொண்டிருந்து அதன் பிறகு கிடைக்கும் பஸ்ஸில் பயணம் செய்து ஓடிக் கொண்டிருப்பேன். 2013 ஆம் ஆண்டு தான் என்னுடைய முதல் வாகனமான இனோவா காரை வாங்கினேன். முதலில் விஷ்ணு என்பவர் தான் இந்த காரை ஓட்டினார். என்னுடைய வாழ்நாளில் பாதி இந்த கார் தான்.
இந்த காரில் உள்ள சிறப்பு என்னவென்றால் பின்னாடி டிக்கி முழுவதும் புத்தகங்கள் மட்டுமே இருக்கும். தேவை என்றால் படுத்துக் கொள்ளும் மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் வசதியும் உள்ளது. அது மட்டுமல்லாமல் முதல் முறையாக மூன்று லட்சம் கிலோமீட்டர் ஓட்டி பயணம் செய்ததால் இனோவா கம்பெனியிலிருந்து அழைத்து எனக்கு விருது கொடுத்தாங்க. கார் வாங்கிய கொஞ்ச நாட்களிலேயே மூன்று லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்தேன் அதற்காக அந்த விருது கொடுத்தாங்க என்ற ஞானசம்பந்தம் பேசியுள்ளார்.