செல்வராகவனின் அந்த ஒரு பாட்டுக்கு மட்டும் இசையமைக்க 6 மாதம் ஆச்சி… ஜிவி பிரகாஷ் பகிர்ந்த சுவாரசியம்…!

By Nanthini on மாசி 25, 2025

Spread the love

தமிழ் திரை உலகில் மிகவும் பிசியான இசை அமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் ஜி வி பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இவர் பல்வேறு கிளாசிக் பாடல்களை கொடுத்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் பணியாற்றி வருகின்றார். கடந்த ஆண்டு இவருடைய இசையில் லக்கி பாஸ்கர், தங்களால் மற்றும் அமரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. ஒவ்வொரு படத்திலும் ஜிவி பிரகாஷ் பெயர் சொல்லும் விதமாக ஒரு பாடல் ஆவது அமைந்து விடுகின்றது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் மொத்த பாடல்களும் ஹிட் கொடுத்தது.

கஷ்டம்ன்னு வந்துட்டா கர்ணனா மாறிடுவாப்ல… கல்லூரி மாணவிக்கு செய்த உதவிய இசை  அசுரன் ஜிவி பிரகாஷ்.. | GV Prakash has helped a college student who  requested on Twitter ...

   

சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்திற்கு இவர் இசையமைத்து வருகின்றார். இது இவர் இசையமைக்க கூடிய நூறாவது திரைப்படமாகும். அது மட்டுமல்லாமல் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் இவர்தான் பின்னணி இசை அமைக்கின்றார். பல சூப்பர் ஹிட் பாடல்களை ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய கெரியரில் கொடுத்திருந்தாலும் மிகவும் தனித்துவமான ஆல்பமாக அமைந்த படம் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தான்.

   

மூன்றாவது முறையாக இணையும் செல்வராகவன்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணி | Selvaraghavan- G.V.Prakash alliance to join forces for the third time

 

ஒரு சில திரைப்படங்களுக்கு மட்டுமே இசையமைத்த ஜிவி பிரகாஷிடம் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பு பொறுப்பை செல்வராகவன் கொடுத்திருந்தார். ஒட்டுமொத்த திரையுலகமே இரண்டு போகும்படி தன்னுடைய திறமையை இந்த திரைப்படத்தில் அவர் வெளிக்காட்டினார். இப்படியான நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜிவி பிரகாஷ், தனுஷின் மயக்கம் என்ன திரைப்படத்தில் இடம் பெற்ற ஓட ஓட ஓட தூரம் குறையல பாட்டு வெறும் ஒரு மணி நேரத்தில் கம்போஸ் செய்து முடிக்கப்பட்டது.

actor g v prakash says thaai thindra manne song from Aayirathil Oruvan song  took 6 months to compose | அந்த ஒரு பாட்டுக்கு மட்டும் ஆறு மாசம்  ஆச்சு...ஜி.வி பிரகாஷ் சொன்ன சீக்ரெட்

அதனைப் போலவே நீண்ட நேரம் எடுக்கப்பட்ட பாடல் என்றால் அது செல்வராகவன் சார் படத்திற்கான பாடல் தான். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற “தாய் திட்ட மண்ணே” என்ற அந்த ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைக்க 6 மாதங்கள் தேவைப்பட்டது. அந்தப் பாட்டில் ஒரே தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் இந்த பாடலுக்கு இசையமைப்பது மிகவும் சவாலானதாக தான் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு படம் எடுத்து முடிக்க வேண்டிய காலகட்டமான ஆறு மாத காலத்தில் அந்த ஒரு பாடலுக்காக மெனக்கெட்டு இசை அமைத்தேன் என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.