தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஃபிஷ் வெங்கட் என்கின்ற வெங்கட்ராஜ். சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் போன்ற முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் அவருக்காக பிரபாஸ் ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து உதவினார்.
இப்படியான நிலையில் இதுவரை சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலிருந்து வேறு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் நன்கொடையாளர்கள் தரும் பணத்தை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஃபிஷ் வெங்கட் மகள் தெரிவித்துள்ளார். கிட்னி மற்றும் கல்லீரல் உள்ளிட்ட உடல் பாகம் முழுவதும் ரத்தத்தில் இன்பெக்சன் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ள நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
