ரொம்ப காஸ்ட்லியான வில்லனா இருப்பாரு போலயே.. புஷ்பா 2 படத்தில் ஒரு நாளைக்கு பகத் பாஸில் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

By Mahalakshmi on ஜூன் 16, 2024

Spread the love

பகத் பாஸில் புஷ்பா 2 திரைப்படத்திற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.

மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும், வில்லனாகவும் கலக்கி வருபவர் பகத் பாசில். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தன்னுடைய சிறப்பான நடிப்பால் அசத்தி வருகின்றார் இவர் பலரை நடிப்பின் அரக்கன் என கூறி வருகிறார்கள். இவர் நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

   

   

தொடர்ந்து மலையாள மட்டும் இல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படத்தை சுகுமார் இயக்கியிருந்தார் . இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

 

200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவு சாதனை படைத்தது. அதிலும் சமந்தா ஆடிய ஆட்டம். ராஷ்மிகா நடிப்பு என அனைத்தும் இப்படத்தில் மிகப்பெரிய ஹிட் ஆக இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றது. இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. முன்னதாக பெரிதும் எதிர்பாக்கப்பட்ட சமந்தாவின் நடனம் புஷ்பா திரைப்படத்தில் இல்லை.

இந்த முறை சமத்தாவிற்கு பதிலாக குண்டூர் காரம் திரைப்படத்தில் நடனமாடிய ஸ்ரீ லீலாதான் ஐட்டம் நடனம் ஆடுகிறார் என கூறப்படுகின்றது. அவருக்கு ரூபாய் 2  கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. ஏற்கனவே புஷ்பா 2 திரைப்படத்திலிருந்து அல்லு அர்ஜுன் புடவையில் மேக்கப் போட்டு தயாராகி இருந்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலாகி வந்தது.

இப்படி புஷ்பா 2 திரைப்படத்தின் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் பகத் பாஸில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாங்கிய சம்பளம் தான் தற்போது மேலும் பிரபலமாக இருக்கின்றது. அதாவது புஷ்பா 2 திரைப்படத்தின் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 12 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறாராம். இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் ஷாக்காகி இருக்கிறார்கள்.