பிரபல நடிகரான சிங்கம் புலி மாயாண்டி குடும்பத்தார், மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படங்களில் இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமாக இருக்கும்.
அதிலும் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சிங்கம்புலி நடிக்கும் காட்சிகளை பார்த்து சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது. இவர் பல்வேறு படங்களில் குணசத்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். இவரை ஒரு காமெடியனாக அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்கம் புலி 2 சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?
அஜித் குமார் நடித்த ரெட் திரைப்படத்தையும், சூர்யா நடித்த மாயாவி திரைப்படத்தையும் சிங்கம் புலி தான் இயக்கியுள்ளார். அஜித்குமார் பிரியா கில்லு நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு ரெட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சிங்கம் புலி தான் இயக்கினார். இந்த படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.
இதேபோல சூர்யா நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு மாயாவி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்கியவர் சிங்கம்புலி. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். இது மட்டுமில்லாமல் பிதாமகன் ரேணிகுண்டா உள்ளிட்ட திரைப்படங்களில் சிங்கம்புலி வசனகர்த்தாவாகவும் வேலை பார்த்துள்ளார். மேலும் பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் சிங்கம்புலி வேலை பார்த்தது குறிப்பிடத்தக்கதாகும்.