பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரும் நடிகை ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திரா (89) உடல் நல குறைவால் உடல் நலக்குறைவால் காலமானதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாக பரவியது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி திடீரென அவருக்கு உடல் நலக்குறைவை ஏற்பட்ட நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் மருத்துவக் கண்காணிப்பில் அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இறந்து விட்டதாக ஒரு செய்தி ஊடகத்தில் பரவியது. இந்நிலையில் அந்த செய்தி வெறும் வதந்தி என்று அவருடைய மனைவி ஹேமா மாலினி பதிவிட்டுள்ளார்.
அதில், “இங்கே நடப்பவை மன்னிக்க முடியாதது. பொறுப்புள்ள ஊடகங்கள் எப்படி இத்தகைய தவறான செய்திகளை வெளியிட முடியும். ஒருவர் சிகிச்சைக்கு நல்லமுறையில் ஒத்துழைத்து, உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுவரும் போது இப்படியான செய்திகளை வெளியிடுவதா?. இது அவமதிப்பு மட்டுமல்ல; பொறுப்பின்மையும் கூட. தயைகூர்ந்து எங்கள் குடும்பத்துக்கு உரிய மரியாதையும், இப்போதைக்கு தனிமையையும் கொடுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
