16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

By Mahalakshmi on ஜூலை 7, 2024

Spread the love

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன் கட்டினேன் என்பது குறித்து ராயன் இசை வெளியீட்டு விழாவில் கூறி இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது டாப் ஹீரோவாக இருந்தாலும் ஆரம்பத்தில் பல கஷ்டங்களை சந்தித்து படிப்படியாக முன்னேறி இந்த இடத்திற்கு வந்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர் பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வருகின்றார்.

   

   

நடிப்பில் ஆர்வம் செலுத்தி வரும் தனுஷ் அதைத் தொடர்ந்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார். நடிகர் தனுஷின் நீண்ட நாள் ஆசை ஒரு சொந்த வீடு கட்டுவது. தனது பெற்றோர்கள் மற்றும் மகன்களுடன் வசிக்கும் வகையில் ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் என்பதுதான் அவரின் கனவு. அதனால் சென்னை போயஸ் கார்டனில் புதிய வீடு கட்டி குடியேறினார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

 

2021 ஆம் ஆண்டு தனுஷும் அவரின் மனைவி ஐஸ்வர்யாவும் போயஸ் கார்டனில் உள்ள புதிய வீட்டில் பூஜை செய்தனர். அப்போது ரஜினிகாந்த் அவரின் மனைவி லதா உள்ளிட்ட அனைவரும் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். பிறகு 2022ம் ஆண்டு தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் பிரியப் போவதாக அறிவித்தார்கள். அதற்குப் பிறகுதான் தனுஷின் புதிய வீடு கட்டி நிறைவடைந்தது. அப்போது தனுஷ் மற்றும் அவரது பெற்றோர் அவரின் உடன் பிறந்தவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் பிரிந்துள்ள நிலையில் எதற்காக போயஸ் கார்டனில் வீடு கட்டி அங்கு தங்கி இருக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். நேற்று நடந்த ராயன் பட விழாவில் அதற்கான பதிலை கொடுத்திருக்கின்றார் நடிகர் தனுஷ். அப்போது பேசிய அவர் போயஸ் கார்டனின் நான் வீடு கட்டியது இவ்வளவு பெரிய சர்ச்சையாகும் என நினைத்திருந்தால் நான் அங்கு வீட்டை கட்டி இருக்கவே மாட்டேன்.

நான் யாருடைய ரசிகன் என்பது பலருக்கும் தெரியும். நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன். ரஜினிகாந்த் சாரின் வீடு போயஸ் கார்டனில் இருந்தது. எனக்கு 16 வயது இருக்கும்போது ரஜினி சாரின் வீட்டை எட்டி எட்டி பார்ப்பேன். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடும் போயஸ் கார்டனில் தான் இருந்தது. அப்போதுதான் எனக்கு போயஸ் கார்டனில் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை தோன்றியது. அப்போது இருந்த 16 வயது வெங்கடேஷ் பிரபுவுக்கு இந்த தனுஷ் கொடுத்த பரிசு தான் போயஸ் கார்டனின் தான்கட்டி இருக்கும் 150 கோடி ரூபாயிலான வீடு என்று அவர் கூறுகிறார்.