பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் குஷ்பூ நடித்த கிழக்கு வாசல், சின்னத்தம்பி, நாட்டாமை, காத்திருக்க நேரமில்லை, கல்யாண கலாட்டா உள்ளிட்ட படங்கள் மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. அந்த காலகட்டத்தில் குஷ்பூ இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். சுமார் 16 வருடம் குஷ்பூ முன்னணி கதாநாயகியாக விளங்கினார்.
இந்நிலையில் குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது நானும் எனது மாமியாரும் பயங்கரமாக சண்டை போடுவோம். எங்களுக்குள்ள ரொம்ப சண்டை வரும். அம்மா எப்படி இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். நான் இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு தானே நீ இப்படி சண்டை போடுற அப்படின்னு கேட்பாங்க. நான் ஆமா நீங்க கோயம்புத்தூருக்கு கிளம்பிடுங்கன்னு சொல்லுவேன். அடுத்த நிமிஷம் நான் ரூமுக்கு போய்டுவேன். அப்போது யாராவது வந்து என்ன உங்க மருமகள் இப்படி பேசுறா.
இதெல்லாம் நல்லா இல்ல அப்படின்னு கேட்டா, நீ எவன்டா என் மருமகள பத்தி பேசுறதுக்கு அப்படின்னு கேட்ப்பாங்க. இதுவரைக்கும் யாருகிட்டயும் என் மாமியார் என்ன விட்டுக் கொடுத்ததே இல்லை. இப்ப அவங்களுக்கு 91 வயசு ஆச்சு. தினமும் நைட்டு 10 மணிக்கு நான் உலகத்துல எங்க இருந்தாலும் எனக்கு கால் பண்ணி சாப்பிட்டியான்னு கேப்பாங்க. அவங்க எந்திரிச்சு நடக்க ரொம்ப சிரமப்படுவாங்க. ஆனாலும் கீழ்தளத்திலிருந்து எங்களை பாக்குறதுக்கு மாடிக்கு வருவாங்க என உருக்கமாக பேசி உள்ளார்.