ஆஸ்கர் நாயகன் ரோலை சிம்பு பண்ணினால்..? தனுஷுக்கு எதிராக கொடி தூக்கும் STR ரசிகர்கள்..!!

By Priya Ram

Updated on:

இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் படத்தின் அறிமுக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னணி நடிகரான தனுஷ் ஏற்கனவே பயோபிக் படத்தில் இளையராஜாவாக நடிக்க இருக்கும் தகவல் உறுதியானது. அந்த படத்தை கேப்டன் மில்லர், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இயக்க உள்ளார்.

   

இந்த அறிமுக விழாவில் தனுஷ், இளையராஜா, கமல்ஹாசன், பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் பங்கேற்றனர். இதற்கிடையே சிம்பு ரசிகர்கள் ஏற்கனவே இளையராஜாவின் பயோபிக்கை எஸ்.ஜே சூர்யா பண்ணிட்டாரே என கூறி இசை படத்தின் போஸ்டர்களை வைரலாக்கி வந்தனர். மேலும் ஏ.ஆர் ரகுமானின் பயோ பிக் படத்தில் சிம்பு நடித்தால் நல்லா இருக்கும் என போட்டோவை எடிட் செய்துள்ளனர்.

இளையராஜாவின் இளவயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்குமா? அருண் மாதேஸ்வரன் இயக்கிய படங்கள் அந்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில் தனுஷ் எப்படி இளையராஜாவின் பயோ பிக்கில் அருண் மாதேஸ்வரனை நம்பி நடிக்கப் போகிறார் என சிம்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு எஸ் டி ஆர் 48 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு சிம்பு யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நடிகர் தனுஷ் ராயன், குபேரா இளையராஜாவின் பயோபிக் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

author avatar
Priya Ram