ஷூட்டிங் ஸ்பாட்டில் அதற்காக மட்டும் ஒரு நாளுக்கு 25,000 ரூபாய் செலவு செய்யும் தனுஷ்.. விழிபிதுங்கும் தயாரிப்பிலார்..

By Priya Ram

Updated on:

பிரபல நடிகரான தனுஷ் அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்லாவின் இயக்கத்தில் உருவாக உள்ள குபேரா படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

   

வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். இதற்கிடையே இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கை படமாக்கும் முயற்சியில் தனுஷ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அடுத்ததாக தனுஷ் அவரே இயக்கி நடிக்கப் போகும் காதல் கதை நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம். இந்த படத்தின் வேலைகளும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆக்சன் திரில்லராக உருவான ராயன் திரைப்படத்தில் தனுஷ் உடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த படங்கள் கைவசம் இருப்பதால் தனுஷ் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது தனுஷ் தினமும் ஒரு Hair dresser- ஐ அழைத்து வருகிறாராம். அவருக்கு வேலை இருக்கிறதோ இல்லையோ தினமும் அந்த hair dresser-க்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டுமாம். Hair dresser-க்கு தினமும் அங்கு என்ன வேலை என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று அறியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.

author avatar
Priya Ram