பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. ஆனால் ஒரு சில காரணங்களுக்காக தற்போது படத்தின் ஷூட்டிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தையும் தயாரிக்கிறது. தற்போது தயாரிப்பு நிறுவனத்திடம் போதிய நிதி இல்லாததால் வேட்டையன் படத்தின் வேலைகளை முதலில் முடித்துவிட்டு அதில் இருந்து வரும் லாபத்தை வைத்து விடாமுயற்சி படத்தை எடுக்க திட்டமிட்டதாக ஏற்கனவே செய்திகள் உலா வந்தது.
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வருகிற மே மாதம் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. மார்க் ஆண்டனி படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். குட் பேட் அக்கலி திரைப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கிடப்பில் கிடக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை. இதனால் விடாமுயற்சி படத்திற்கு முன்னரே குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறதாம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எந்த படம் முதலில் திரைக்கு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.