அந்த படத்துக்கு பிறகு ரொம்ப ஸ்ட்ரிக்டா மாறிய தனுஷ்.. ஒரு படத்திற்கு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் கேட்கிறாரா..?

By Mahalakshmi on ஆனி 18, 2024

Spread the love

நடிகர் தனுஷ் ஒரு திரைப்படத்திற்கு 50 நாள் மட்டுமே கால்ஷீட் தருவதாகவும் மேலும் 50 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்திலும் நடித்திருக்கின்றார்.

   

   

நடிகராக அறிமுகமான இவர் தற்போது இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறி இருக்கின்றார். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்று கலக்கி வரும் பா பாண்டி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து ராயன் என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.

 

கையில் ஏகப்பட்ட திரைப்படத்தை வைத்திருக்கும் இவர் பிஸியாக நடித்து வருகின்றார். மேலும் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்திலும் அதைத் தொடர்ந்து இளையராஜா பயோப்பிக்கிலும் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ஓரளவுக்கு சுமாரான வரவேற்பை மற்றும் தான் பெற்றிருந்தது. கதையை நேரடியாக எடுக்க முடியாத சூழலில், சுதந்திரத்திற்கு முந்தைய கதையாக மாற்றி எடுத்திருந்தார் அருண் மாதேஸ்வரன்.

இந்த படம் பல விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் தற்போது இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தின் இயக்கி வருகின்றார். இதில் அவர் மிகவும் ஸ்ட்ரிக்ட் கூறிவிட்டாராம். அதாவது இனிமேல் தனது தான் ஒரு படத்திற்கு 50 நாள் மட்டுமே கால்ஷீட் கொடுப்பேன்.

மேலும் 50 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார். அந்த வகையில் ஒரு நாளைக்கு ஒரு கோடி என்ற அளவிற்கு தனுஷின் சம்பளம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து நடிகர்கள் எல்லாம் சம்பளத்தை உயர்த்தி வரும் நிலையில் நடிகர் தனுஷின் தற்போது 50 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி இருக்கின்றார். முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த் ஆகியோர் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.