GOAT படத்தில் விஜயகாந்த்.. வெங்கட் பிரபுவுக்கு விஜய் போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்..!!

By admin on ஆனி 18, 2024

Spread the love

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி கோட் திரை படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

Thalapathy Vijay: Will Thalapathy Vijay be crowned as the 'G.O.A.T'? Second  look at superstar's upcoming movie to be unveiled at 6:00 today - The  Economic Times

   

இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தளபதி விஜயின் பிறந்தநாள் முன்னிட்டு படத்தின் இரண்டாவது சிங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்ததால் இப்போது போஸ்ட் ப்ரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

   

Vijay`s GOAT Squad

 

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மறைந்த தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த்தை கோட் திரைப்படத்தில் காண்பிக்க உள்ளார்கள். AI தொழில்நுட்ப மூலம் விஜயகாந்த் கோட் படத்தில் வருவது போல காண்பிக்க உள்ளார்கள். இந்த நிலையில் தளபதி விஜய் வெங்கட் பிரபுவுக்கு ஸ்ட்ரக்டாக ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம். அது என்னவென்றால் கோட் படத்தில் விஜயகாந்த் வரும் காட்சிகள் அப்படியே தத்ரூபமாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு சிறிய காட்சியில் கூட பொம்மை உருவம் போல் தெரியக்கூடாது.

ഗോട്ടി'ൽ വിജയകാന്തും, പുനഃസൃഷ്ടിക്കുക എഐ സഹായത്തോടെ; സ്ഥിരീകരിച്ച് ഭാര്യ  പ്രേമലത, The Goat, The Goat Movie, Goat Movie Songs, Actor Vijay, Actor  Vijayakanth, Venkat Prabhu

நிஜமாகவே விஜயகாந்த் வருவது போலவே இருக்க வேண்டும். அந்த காட்சியை மிகவும் கவனமாக செய்யுங்கள். அவரை பெருமை படுத்தும் விதமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நானே அந்த காட்சியை படத்திலிருந்து நீக்கி விடுவேன் என கூறியிருக்கிறாராம். படத்தின் காட்சிகள் கவனமாக உருவாக்கப்படுகிறது. அதிலும் விஜயகாந்த் வரும் காட்சிகள் அவரை பெருமைப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்பதில் விஜய், வெங்கட் பிரபு, பட குழுவினர் என அனைவரும் கவனமாக உள்ளார்களாம்.

The GOAT: Makers of Thalapathy Vijay starrer to feature late actor Captain  Vijayakanth in a cameo using AI | PINKVILLA