அம்மாடியோ, தனுஷ் கட்டி இருக்கும் இந்த வாட்ச் விலை இவ்வளவா?.. கேட்டாலே தல சுத்துதே..!

By Nanthini on ஆனி 18, 2025

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். சினிமா மட்டுமல்லாமல் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்களின் ஒருவராக மாறியுள்ளார். இவருடைய நடிப்பில் அடுத்ததாக குபேரா திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் தனுஷ் உடன் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் வருகின்ற ஜூன் இருபதாம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இட்லி கடை உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்து வருகின்றார். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்திருக்கும் நிலையில் பணக்காரர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக போராடும் நபராக படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருந்தது. சமீபத்தில் ஹைதராபாத்தில் குபேரா படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் தனுஷ் அணிந்து வந்த வாட்ச் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த நிலையில் அதன் விலை என்ன என்று அனைவருமே தேட தொடங்கினர். தற்போது தனுஷ் அணிந்து வந்த வாட்ச்சின் விலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது F.P Journe என்ற நிறுவனத்தின் அந்த வாட்ச் விலை சுமார் 86 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.