#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்ப காலகட்டத்தில் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்றாலும், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பு காரணமாக தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறார்.
சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதைத்தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்து திரைப்படங்களையும் இயக்கி வருகிறார் நடிகர் தனுஷ்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தெலுங்கு பட இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க மும்பை மற்றும் ஹைதராபாத் பகுதியில் நடைபெற்று வருகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மும்பையில் இருக்கும் தாராவி பகுதியை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் ஒரு பிச்சைக்கார வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். மேலும் நாகார்ஜுனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது வில்லன் கதாபாத்திரத்தில் நாகார்ஜுன் நடிப்பதாக கூறப்பட்டு வருகின்றது. இப்படத்தில் இருந்து சமீபத்தில் நாகார்ஜுனா மற்றும் தனுஷ் ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக இருந்து கேங்ஸ்டராக மாறுவது போன்று கதைகளம் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. இப்படி மும்பையில் விறுவிறுப்பாக படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் அங்கு ஒரு மிகப்பெரிய குப்பை கிடங்கில் படத்தின் சூட்டிங் நடைபெற்றதாம்.
அதில் பணியாற்றிய அனைத்து நபர்களுக்கும் மாஸ்க்கு வழங்கப்பட்ட நிலையில் 10 மணி நேரம் மாஸ்க் கூட இல்லாமல் நடிகர் தனுஷ் நடித்ததாக படத்தின் பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் மிகவும் மெனக்கட்டு நடிப்பதாக கூறப்படுகின்றது. இதனைக் கேட்ட பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். ஏனென்றால் குப்பை கிடங்கு பக்கம் சென்றாலே அதன் நாத்தம் குடலை புரட்டும். அப்படி இருக்கும் சமயத்தில் நடிகர் தனுஷ் எப்படி 10 மணி நேரம் நடித்தார் என கூறி அவரின் மெனக்கிடலை பாராட்டி வருகிறார்கள்.
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…
பிரபல மலையாள சின்னத்திரை கலைஞர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கேரள மாநிலம் திருச்சூர்…