பிரபல நடிகரான போஸ் வெங்கட் மெட்டிஒலி சீரியலில் நடித்து பிரபலமானார். இவர் ஈரநிலம், சிவாஜி, மருதமலை, தாம் தூம், சிங்கம், சரோஜா, யாமிருக்க பயமேன், 36 வயதினிலே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் போஸ் வெங்கட் நடித்துள்ளார்.இவரது மனைவி சோனியா போஸ் வெங்கட் 3 வயதில் மலையாள திரைப்படமான இவள் ஒரு நாடோடி படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் பேபி சோனியா என பலராலும் அறியப்படுகிறார். கடந்த 1987-ஆம் ஆண்டு நவரத்தி பூவு என்ற திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநிலம் விருது வழங்கப்பட்டது.

சோனியா போஸ் ஆசைகள், மலர்கள், முகூர்த்தம், பாசம், செல்லமே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சன் டிவியில் கடைசியாக பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். போஸ் வெங்கட் சோனியா தம்பதியினருக்கு தேஜஸ்வின் என்ற மகனும், பவதாரணி என்ற மகளும் இருக்கின்றனர்.இந்நிலையில் போஸ் வெங்கட் சமீபத்தில் அளித்த பேட்டியில், காதல் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் விவாகரத்து என்பது தான் வெறுப்பாக உள்ளது.

காதலிக்கும் போது ஒரு பெண்ணுக்காக காத்திருந்து ஒருவேளை அந்த பெண் வராவிட்டால் அன்றைய நாளே வெறுப்பாக தோன்றுகிறோம். அப்படி உருகி உருகி காதலித்த பெண்ணை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் வாழ்க்கை நடத்தும் போது அருகில் வைத்து அவரை பார்க்கும் போது அவ்வளவு வெறுப்பாக இருக்கிறது. இதற்கு இரண்டுக்கும் நடுவில் உள்ளதை தான் நாம் ஆராய வேண்டும். ஆனால் மனைவியிடம் தோற்றுப் போவதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் கிடையாது. அப்படி மனைவியிடம் தோற்றுப் போனால் தான் குடும்பம் நடத்த முடியும். இதில் என்ன கஷ்டம் உள்ளது என்று காதல் மற்றும் திருமணம் பற்றி போஸ் வெங்கட் பேசியுள்ளார்.
