தமிழ் சினிமாவில் பல வருடங்களாக துணை கதாபாத்திரங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருப்பவர் தான் பிளாக் பாண்டி. சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சினிமாவை பொருத்தவரை இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அங்காடி தெரு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இவர் நடித்த சாட்டை திரைப்படத்திலும் சிறப்பான பெயரை பெற்றார். இப்படி நல்ல நடிகர் என்று அடையாளம் இருந்தாலும் இவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் நடிப்பின் மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்ததால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்படி கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாகேஸ்வரி மற்றும் ஆட்டோகிராப் என வரிசையாக இவர் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு இவருக்கு துணை கதாபத்திரங்கள் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையிலும் தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பிறகு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லிக் கொள்ளும் படியான ரோல்கள் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. இறுதியாக விஜயின் கோட் திரைப்படத்தில் கூட ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
தற்போது இஎம்ஐ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிளாக் பாண்டி சமீபத்தில் அடித்த பேட்டியில் நடிகை அஞ்சலி பற்றி பேசியுள்ளார். அதில், அங்காடித் தெரு திரைப்படத்திற்கு முன்பே எனக்கும் அஞ்சலைக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. வாடி போடி என்று கூப்பிடும் அளவிற்கு இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு. நடன இயக்குனர் ஜெயந்தி மாஸ்டரின் மாணவர்கள் தான் நாங்கள். நாங்கள் இருவரும் நடன வகுப்பில் நடனமாடி பழகியபோது அஞ்சலி எனக்கு முன்பதாக நடனம் ஆடுவார். உன்னை பார்த்து தான் நான் நடனமாடி கொண்டிருக்கிறேன் ஒழுங்கா ஆடு என்று சொல்லுவேன்.
ஒரு கட்டத்திற்கு மேல் ஏன் இவர்களுடன் பழகினோம் என்று கூட யோசனை வரும். நிறைய பேர் அப்படி தான் யோசனை செய்கிறார்கள் என நினைக்கிறேன். நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா என்று கூட கேட்டு இருக்கிறேன். அப்படியெல்லாம் இல்லை என்று அஞ்சலி கூறினார். மீண்டும் நாங்கள் ஜெயம் ரவியுடன் இணைந்து சகலகலா வல்லவன் படம் நடித்தோம். அப்போது தான் பேசினேன். உனக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்டபோது இல்லை என சொல்லிவிட்டார். இரண்டு மூன்று முறை மெசேஜ் கூட அனுப்பினேன் ஆனால் பதில் சொல்லவே இல்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டேன். இதுவும் கடந்து போகும் என நகர்ந்து விட்டேன் என ப்ளாக் பாண்டி பேசியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…