மைனா படத்தில் நடிக்க முதலில் கமிட்டானது அந்த நடிகரா..? நடிகர் விதார்த் சொன்ன தகவல்.. இது தெரியாம போச்சே..!

By Mahalakshmi on ஆனி 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மைனா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் பரணிதானாம் இதனை மைனா திரைப்படத்தின் நடிகர் வித்தார்த் ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கி வருபவர் பிரபு சாலமன்.

   

இவர் இயக்கத்தில் வெளியான மைனா, கும்கி, தொடரி உள்ளிட திரைப்படங்கள் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த திரைப்படம். அதிலும் மைனா திரைப்படம் மிக ப் பெரிய வரவேற்பு பெற்றது. இப்படம் பிரபுசாலாமனை திரும்பி பார்க்க வைத்தது. இப்படத்தின் மூலமாகத்தான் அமலாபாலும் பிரபலமானார். இப்படத்தில் நடிகர் வித்தாத் ஹீரோவாக நடிக்க நடிகை அமலாபால் ஹீரோயினியாக நடித்திருப்பார்.

   

 

ஒரு நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் நகரும். முதலில் இந்த திரைப்படத்தில் நடிக்க இருந்தது நடிகர் பரணி தானாம். சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் பரணி. அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் திரைப்படங்களை நடிக்கவில்லை என்றாலும் நல்ல படத்திற்காக காத்திருக்கின்றார். இவர்தான் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முதலில் கமிட்டாகினாராம். அவருக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து புக் செய்யப்பட்ட நிலையில் படத்தின் கதை காதலை மையமாக வைத்து நகர்வதால் அவர் செட்டாக மாட்டார் என்பதனால் விதார்த் அவர்களை வைத்து இந்த திரைப்படத்தை எடுத்தார்களாம், இதனை நடிகர் விதார்த் ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார்.