தமிழ் சினிமாவில் வடிவேலு குழுவின் காமெடி நடிகர்களில் நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் நெஞ்சில் இடம்பிடித்தவர் பாவா லட்சுமணன். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் வடிவேலுவோடு இணைந்து நடித்த பின்னர் இவருக்கு பெரிய அங்கிகாரம் கிடைத்தது. அதன்பின்னர் அவர் விவேக், சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார். அவர் நடித்ததில் மாயி, ஆனந்தம், அயன் மற்றும் கலகலப்பு ஆகிய படங்கள் அவருக்கு பிரபல்யத்தைப் பெற்றுத்தந்தன.
பாவா லட்சுமணன் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் அறியப்படுபவர் இல்லை. அவர் ஒரு புரொடக்ஷன் மேனேஜராக பல ஆண்டுகள் வேலை செய்துள்ளார். குறிப்பாக இயக்குனர் விக்ரமனின் படங்களில் தொடர்ந்து பணியாற்றிய அவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான புரொடக்ஷன் மேனேஜரானார். அப்படி அவர் ஆனந்தம் படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் போதுதான் அந்த படத்தில் ஒரு திருடன் வேடத்தில் நடித்து கவனிக்கப்படும் நடிகர் ஆனார்.

#image_title
அதன் பின்னர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த பின்னர் அவருக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாகக் கிடைத்துள்ளன. அப்படிதான் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை திரைப்படத்தில் ஒரு முக்கியவேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவரும் இரண்டு நாட்கள் அந்த படத்தில் நடித்துள்ளார்.
அந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ள அவர் “அந்த படத்தில் நடிக்கும்போதே தனுஷ் என்னிடம் ‘அப்படி நடிங்க.. இப்படி நடிங்க’ எனக் கூறுவார். இப்படியெல்லாம் நடித்தால் எங்க அண்ணனுக்குப் பிடிக்காது என்று கூறுவார். இரண்டு நாள் நடித்த பின்னர் செல்வராகவன் எல்லார் முன்னாடியும் ‘உனக்கு நடிக்கவே தெரியல’ எனக் கெட்டவார்த்தையில் திட்டி அனுப்பிட்டான். எனக்கு அவமானமாப் போச்சு. நானும் வளந்து வரும் காலம் என்பதால் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன்.
பாரதிராஜா, கே எஸ் ரவிக்குமார் போன்ற இயக்குனர்கள் கூட நடிகர்களைத் திட்டுவார்கள். ஆனால் அவர்கள் நல்லா நடிக்கவில்லை என்றால் மட்டுமே அப்படி செய்வார்கள். ஆனால் இவர் அப்படி இல்லை.அவருடைய உதவி இயக்குனர்களே, அவரைக் கண்டால் ஓடிவிடுவார்கள்.” எனக் கூறியுள்ளார்.