தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பாலசரவணன். ஆரம்பத்தில் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தான் பங்கேற்றார். அதன் பிறகு இவர் வெள்ளித் துறையில் சென்று பல படங்களில் நடித்திருக்கிறார். முதல் முதலாக 2003 ஆம் ஆண்டு வெளியான குட்டி புலி என்ற திரைப்படத்தில் சசிகுமார் உடன் சேர்ந்து நடித்ததன் மூலம் வெள்ளி திரையில் நடிகராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. அதன்படி ஈகோ, திருடன் போலீஸ், டார்லிங், வலியவன், வேதாளம் மற்றும் கூட்டத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதேசமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான அயலான் திரைப்படத்திலும் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் பால சரவணன் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் தனது அம்மா அப்பா மற்றும் சகோதரியுடன் இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.