“எனக்கு மட்டும் ஏதாவது ஆகிட்டா”.. மருத்துவமனையில் நடிகர் பாலாவின் 3வது மனைவி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

Spread the love

தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர்தான் நடிகர் பாலா. இவர் இயக்குனர் சிவாவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அடுத்தடுத்து காதல் திருமணம் பிறகு விவாகரத்து என்ற செய்திகள் மூலம் தான் இவர் சோசியல் மீடியாவில் பிரபலமானார். அதன்படி தனது இரண்டாவது திருமணம் முடிவுக்கு வந்த பிறகு மூன்றாவதாக டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு வருடங்களில் பிரிந்து விட்ட நிலையில் கடந்த வருடம் இறுதியில் நான்காவதாக தனது உறவினர் பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருந்தாலும் சோசியல் மீடியாவில் பாலாக்கும் அவருடைய மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத்துக்கும் தொடர்ந்து வார்த்தை போர் நடந்து வந்தது. ஒரு கட்டத்தில் எலிசபெத் நடிகர் பாலா தன்னை மிரட்டுவதாகவும் குடும்ப வாழ்க்கை நடத்திய போது தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்தபடி எலிசபெத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தும் கேரள முதல்வரிடம் முறையீட்டும் கூட என்னுடைய பிரச்சனை தீரவில்லை.

பாலா என் மீது தொடர்ந்த தாக்குதல்கள், தற்போது விடும் மிரட்டல்கள், சோசியல் மீடியாவில் பரப்பக்கூடிய அவதூறுகள் என எல்லாவற்றையும் ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் உள்ளேன். ஆனால் அவர் நீதிமன்றத்தில் சொன்ன தேதியில் ஆஜராகாமல் தவிர்த்து வருகின்றார். பொதுவாக பெண்கள் வெளியே வந்த தங்கள் பிரச்சனையை உரக்க சொன்னாள் நீதி கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அது எவ்வளவு தவறு என்பதை இப்போது தெரிகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் தான் இந்த நிலைமைக்கு நான் ஆளாகியுள்ளேன்.

ஒருவேளை இந்த வீடியோ வெளியானால் என்ன நிகழும் என்று கூட எனக்கு தெரியவில்லை. அதனைப் பார்ப்பதற்கு நான் உயிரோடு இருப்பேனா என்று கூட தெரியலை. அப்படி எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நடிகர் பாலாவும் அவரது குடும்பத்தினரும் தான் முழு பொறுப்பு என்று எலிசபெத் குழுவில் உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் எலிசபெத்து வெளியிட்டுள்ள வீடியோ தற்போது பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் போலீசார் இது குறித்து விசாரித்து வருவதாக தெரிகிறது.

Nanthini

Recent Posts

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

2 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

11 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

36 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

43 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

56 minutes ago

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

1 மணத்தியாலம் ago