தமிழில் அஜித்தின் வீரம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் பாலா. மலையாள நடிகரான இவர் தமிழில் அன்பு , அப்பா அம்மா செல்லம் மற்றும் வீரமுள்ளிட்டம் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு சில காலம் தனிமையில் வாழ்ந்து வந்த இவர் டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடனும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அவரையும் விவாகரத்து செய்தார்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை சமீபத்தில் தான் பாலா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் எர்ணாகுளம் கலூர் பாவகுளம் கோவிலில் நடைபெற்றது. இவர்களின் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. அதே சமயம் பாலாவின் மனைவி கோகிலாவை பற்றி பத்திரிகைகளில் தவறான செய்திகளும் வந்தன. இப்படியான நிலையில் தனது மனைவிக்கு ஆதரவாக குரல் கொடுத்து பாலா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நானும் என் மனைவியும் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறோம்.
அதற்கு முக்கிய காரணம் மீடியா தான். அடுத்தவங்க மனைவியைப் பற்றி நீங்கள் எப்படி தவறா எழுத முடியும். என்னுடைய மனைவி கோகிலா வேலைக்காரி என்றும் வேலைக்காரியின் மகள் என்றும் தேவை இல்லாம எழுதிட்டு இருக்கீங்க. இதுதான் மீடியாவின் தர்மமா? என் மனைவி வேலைக்காரி என்று சொல்லும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது. நானும் உங்க மனைவி பற்றி பேசட்டுமா. சினிமா நடிப்பு பற்றி என்ன வேணாலும் பேசுங்க. என் மனைவி பற்றி பேச உங்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது. அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தா? என் மனைவி கோகிலாவின் தந்தை பிரபலமான அரசியல் பிரமுகர்.
இந்த விவகாரம் தொடர்பாக நான் போலீசில் புகார் அளிக்க சென்ற போது அவர்தான் என்னை தடுத்து விட்டு நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறினார். நான் இந்த சமூகத்தில் பலருக்கு பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி எல்லாம் பேசாமல் என் மனைவி பற்றி எதுக்கு பேசுறீங்க. தவறான செய்தி ஒரு பத்திரிக்கையில் வந்தது. உடனே அனைத்து பத்திரிகைகளும் என் மனைவி பற்றி எழுதுகிறார்கள். எங்கள் மகிழ்ச்சியை கெடுப்பதற்காகவே இது போன்ற செய்தியை சிலர் பரப்புகின்றனர். என் மனைவி பற்றி தவறான செய்தியை எழுதிய நபர் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவங்க மன்னிப்பு கேட்கிற வரைக்கும் நான் சும்மாவே இருக்க மாட்டேன் என்று ஆதங்கத்துடன் பாலா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் காரணமாக, சைபர் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிவேகமாக…
2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம்…
புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு…
சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய…
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…