CINEMA
நல்லவேளை கல்யாணம் பண்ணல.. ஒன்னு விடாம எல்லாத்தையும் கொடுத்துட்டேன்.. நடிகர் பப்லுவின் முன்னாள் காதலி ஓபன் டாக்..!!
நடிகர் பப்லு பிரித்திவிராஜ் கடந்த 1990 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சந்தன காற்று, சிகரம், நான் பேச நினைப்பதெல்லாம், செல்ல கண்ணு உள்ளிட்ட திரைப்படங்களில் பப்லு நடித்துள்ளார். 57 வயதான பப்லு தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு இளம் நடிகரைப் போலவே உள்ளார். அவரும் 21 வயது மலேசியா பெண்ணும் காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்ந்தனர்.
இந்த செய்தி அனைவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வயதில் கல்யாணம் தேவையா என பலரும் பப்லுவை விமர்சித்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அந்த பிரச்சனையால் திடீரென ஷீத்தல் பப்லுவை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதுவரை பப்லு தான் கலந்து கொண்ட பேட்டிகளில் சில பிரச்சனைகளை பற்றி கூறினார். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
இருவருக்கும் செட் ஆகவில்லை என்று மட்டும் தான் பப்லு கூறி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஷீத்தல் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அவர் கூறும் போது, எங்களுக்குள் என்ன வேண்டும் என்றாலும் நடந்திருக்கலாம். அது ஒரு மேட்டர் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நாங்கள் பிரிய வேண்டும் என நினைத்து இருவருமே பிரிந்து விட்டோம். அது மட்டும் இல்லாமல் அவர் எனக்கு அன்பளிப்பாக கொடுத்த அத்தனை பொருட்களையும் திரும்ப கொடுத்து விட்டேன். முதல் முதலில் ப்ரபோஸ் செய்யும் போது கொடுத்த மோதிரத்தையும் அவரிடம் நான் கொடுத்து விட்டேன்.
நல்ல வேலை எங்களுக்குள் திருமணம் நடக்கவில்லை. அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம். ஏனெனில் அது எங்கள் இரு வீட்டாரையும் பாதிக்கும். அதனால் அதை நினைத்து நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என ஷீத்தல் கூறியுள்ளார். மேலும் உங்களது வாழ்க்கையில் இன்னொரு நபர் யாராவது வந்துள்ளார்களா என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷீத்தல் ஒருத்தரை வச்சு பட்டதே போதும். இனிமேல் என் வாழ்க்கையில் இன்னொரு நபர் என்பதே கிடையாது என ஓப்பனாக கூறியுள்ளார்.