Connect with us

ரூ. 14,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம்… இன்று 40,000 கோடி ரிவென்யூ பெறும் MRF Tyres இன் வெற்றிக் கதை தெரியுமா…?

Startup

ரூ. 14,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம்… இன்று 40,000 கோடி ரிவென்யூ பெறும் MRF Tyres இன் வெற்றிக் கதை தெரியுமா…?

ஒரு தொழில் ஆரம்பிப்பது என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அந்த தொழிலில் ஏற்படும் தடைகளை தாண்டி மேலே வருவது ஒரு சிலர் தான். அப்படி ஒரு சாதாரண மனிதன் 14,000 ரூபாய் கடன் வாங்கி ஆரம்பத்தில் பலூன் விற்று கொண்டிருந்தவர். இன்று 40,000 கோடி ரெவென்யு பெரும் MRF டயர்ஸ் நிறுவனத்தின் வரலாறு மற்றும் வெற்றிக் கதை என்ன என்பதை இனி காண்போம்.

இந்திய வர்த்தக சந்தை நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் பல இன்னல்களை சந்தித்தது. அந்த இன்னல்களில் பல நிறுவனங்கள் காணாமல் போனது. ஒரு சில நிறுவனங்கள் விரிவாக்கம் செய்து மாபெரும் நிறுவனமாக மாறியது. அப்படி இந்தியாவின் வர்த்தக சந்தையில் முதலிடம் ஆக இருக்கும் MRF டயர் உருவானது அந்த நேரத்தில் தான்.

   

   

MRF என்பது மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்பதன் சுருக்கமாகும். கே எம் மம்மன் மாப்பிள்ளை என்பவர் தான் இந்நிறுவனத்தில் தலைவர் ஆவார். இவர் கேரளாவில் பிறந்தவர். சிறுவயதில் இருப்பதற்கு வீடு கூட இல்லாமல் பல கஷ்டங்களை அனுபவித்தார் கே எம் மம்மன் மாப்பிள்ளை.

 

கல்லூரி படிப்பை முடித்து தனது திருமணத்திற்கு பின்பு 1946 ஆம் ஆண்டு ஒரு சிறிய அறையில் பொம்மை பலூன் தயாரித்து பாக்கெட் போட்டு சாலையில் விற்பனை செய்ய தொடங்கினார் மம்மன் மாப்பிள்ளை. இவருடைய மனைவி ஒரு வேதியல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரப்பர் சார்ந்த தொழிலில் இறங்க ஆர்வமாக இருந்த மம்மன் மாப்பிள்ளைக்கு சுதந்திரத்திற்கு பின்பு வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே Tread Rubber சப்ளை பிரிவில் இருந்ததை கவனித்த மம்மன் மாப்பிள்ளை அந்த துறையில் இறங்கலாம் என்று முடிவு செய்தார்.

1952 ஆம் ஆண்டு Tread Rubber சப்ளை செய்ய சென்னையில் புதிய உற்பத்தி தளத்தை அமைத்தார்.. அதற்கு மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி- MRF என்ற பெயரையும் வைத்தார். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு இந்திய நிறுவனம் தனி ஆளாக நின்றது. அதுவே காட்டு தீ போல் பரவி MRF மிகப் பிரபலமானது. சப்ளை பிரிவில் 50 சதவீத வர்த்தகத்தை வெகு விரைவிலேயே MRF பிடித்தது. இந்த MRF வளர்ச்சி மற்றும் உருவாக்கிய எழுச்சியால் வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற தொடங்கியது.

1960 இல் tread rubber விற்பனைகளுடன் சொந்தமாக டயர் தயாரிக்க முடிவு செய்தார் மம்மன் மாப்பிள்ளை. ஆனால் அந்த நேரத்தில் டயர் தயாரிப்பது என்பது சாத்தியமான ஒன்றாக எளிதாக ஒன்றாகவும் இருக்கவில்லை. அதற்காக மம்மன் மாப்பிள்ளை அமெரிக்காவின் மேன்ஸ்ஃபில்ட் டயர் அண்ட் ரப்பர் நிறுவனத்துடன் தொழில்நுட்ப உதவிக்காக கூட்டணியை வைத்தார்.

1961 ஆம் ஆண்டு MRF என்ற பெயருடன் டயர் தயாரிப்பு தொழிற்சாலையை சென்னையில் அமைத்தார் மம்மன் மாப்பிள்ளை. அசுர வேகத்தில் MRF டயர்களின் உற்பத்தி தரம் விலை என அனைத்திலும் கவனம் செலுத்தி மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது.

1963ல் சென்னையில் புதிய ஆராய்ச்சி மையத்தை உருவாக்கிய MRF, 1964 இல் மார்க்கெட்டிங் பிரிவை பெரிதாக்கியது MRF. மசில்மேன் புகைப்படம் முதல் சச்சின் பேட் வரை MRF ப்ராடக்டுகள் மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் டயர் துறையில் முன்னிலையில் இருந்த MRF நிறுவனம் 1970களில் அமெரிக்காவுக்கு டயர்களை ஏற்றுமதி செய்தது. 1973-ல் இந்தியாவில் பல தொழிற்சாலைகளை கேரளா, புதுச்சேரி, கோவா, சென்னை, தெலுங்கானா உட்பட அனைத்து இடங்களிலும் உருவாக்கியது. 1980களில் விளையாட்டு துறையில் பைக், கார், கனக வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களுக்கும் தயாரித்து MRF நிறுவனம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது.

1989இல் MRF நிறுவனம் அமெரிக்காவின் மாஸ் ப்ரோ டாய்ஸுடன் கூட்டணி சேர்ந்து FunSkool என்ற பிராண்டை உருவாக்கி பொம்மை தயாரிப்பில் இறங்கியது. Funskool இந்தியா நிறுவனம் டிஸ்னி, வாரனல் பிரதர்ஸ், டோரா என பல முன்னணி கார்ட்டூன் கதாபாத்திரங்களின் பொம்மையை தயாரித்துக் கொடுத்தது. இப்படி ஒரு தனி மனிதனாக உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய பிராண்டாக மாறி அமெரிக்காவுக்கு தன்னுடைய ப்ராடக்டுகளை ஏற்றுமதி செய்து தற்போது 42 ஆயிரம் கோடி ரூபாய் ரெவென்யூ பெறும் பிரம்மாண்ட நிறுவனமாக MRF இருக்கிறது.

Continue Reading
You may also like...

More in Startup

To Top