தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில், என்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிருத்திவிராஜ். தற்பொழுது இவரைப்பற்றி தான் சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை விட பலவருடங்கள் குறைவான சின்னப்பெண்ணை காதலித்து, அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்.

இதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தனர் இருவரும் எதையும் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர் . இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்பொழுது பிரிந்து விட்டதாக இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாவில் பிரித்விராஜுடன் எடுத்துக்கொண்ட வீடியோ, புகைப்படங்களை மொத்தமாக நீக்கி இருக்கிறார். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிருத்திவிராஜ் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பப்லு வேதனையுடன் பேசியிருந்தார். பேசியிருப்பதாவது, ‘இவ்ளோ நாள் தப்பு பண்ணிட்டேன். என் வாழ்க்கையில் நான் நிறைய ஏமாந்துவிட்டேன். இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள். இப்போது தான் எல்லாமே புரிகிறது” என்று விரக்தியாக பேசினார்.

மேலும் அவர் ‘அட்லி மீது எனக்கு ரொம்ப கோவம் இருந்துச்சு. நான் இன்ஸ்டா ல ஒரு வீடியோ பாக்கும் போது அவர் ஒரு குட்டி கதை சொன்னாரு. நம்ம வேல்யூ தெரிஞ்ச இடத்துல தான் நாம் இருக்கணும் அப்படின்னு. இதை அவரு முன்னாடியே சொல்லி இருக்கலாம்’ என்று கூறி இருந்தார். மறைமுகமாக இவர் ஷீத்தலை தான் இதன்மூலம் தாக்கி பேசுகிறாரா? என ரசிகர்கள் தற்பொழுது கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த பேட்டி…
View this post on Instagram
