Categories: சினிமா

என்னங்க சொல்றீங்க நடிகர் அழகம்பெருமாள் விஜய்ய வச்சு படம் இயக்கி இருக்காரா? .. பலரும் அறியாத ஆச்சர்யத் தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் அழகம் பெருமாள். இவர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை திரைப்படத்தில் ஒரு கொடூரமான அரசியல் கட்சி தலைவராக நடித்து மிரட்டியிருப்பார். அந்த படத்தில் அவருக்கும் தனுஷுக்கும் இடையிலானக் காட்சிகள் மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்தன.

அதன் பின்னர் இயக்குனர் ராம் இயக்கிய “கற்றது தமிழ்” படத்தி ஒரு கனிவான பள்ளி ஆசிரியராக அவர் நடித்திருப்பார். அதில் அவரின் நடிப்பும் அவர் பேசிய திருநெல்வேலி தமிழும் அவரை ரசிகர்கள் மனதில் இருக்கை போட்டு உட்காரவைத்தது. அதன் பின்னர் அவர் தேர்ந்த நடிகராக பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் குறிப்பிட்டு சொல்லும்படியான படங்களாக ஆயிரத்தில் ஒருவன்,  கண்டேன் காதலை, ஏழாம் அறிவு, ஒஸ்தி, தரமணி, மாமன்னன் என ஏகப்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடிகர் மட்டுமில்லை, ஒரு இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாத தகவல். ஆம் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் டும் டும் டும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி, படமும் ஹிட்டாக அடுத்து ஜூட் என்ற படத்தை இயக்குனர். இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ஒரு தோல்விப் படமாக அமைந்தது.

அதன் பின்னர் அவர் இயக்கத்தில் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த விஜய் நடித்த உதயா திரைப்படம் ரிலீஸானது. இந்த படமும் ஒரு தோல்விப் படமாக அமைந்தது. இந்த படத்துக்காக முதல்முறையாக ஏ ஆர் ரஹ்மான் விஜய் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படமும் தோல்வியடைந்ததால் அழகம்பெருமாள் தொடர்ந்து படங்கள் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தினார்.

vinoth

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

4 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

13 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

22 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

32 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

42 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

47 minutes ago