90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவையே அலறவிட்ட பிரபலமான நடிகர் தான் முரளி. இவருடைய மூத்த மகன் அதர்வா முரளி தன்னுடைய 21 வயதில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் ஹீரோவாக அறிமுகமானார். இவருடைய முதல் படம் வெளியான சிறிது நாட்களிலேயே அவருடைய தந்தை முரளி காலமானார். இருந்தாலும் துவண்டு போகாத அதர்வா சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்தார். சினிமா துறையில் தனக்கென தனி ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வளர்த்துக் கொண்டார். முதன் முதலில் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய பானா காத்தாடி என்ற காதல் நாடகத்தில் அதர்வா பள்ளி மாணவனாக நடித்திருந்தார்.

இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் விமர்சனங்கள் மற்றும் பல பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது படத்தில் நேரடியான சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞராக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் காதலும் பல திருப்பங்களும் நிறைந்து இருந்தது. இந்த படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக திரையில் ஓடிய நிலையில் படத்தில் அதர்வாவின் நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.

தொடர்ந்து பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் ஒரு அப்பாவியாக அடிமை வேடத்தில் அதர்வா நடித்திருந்தார். தன்னுடைய அழகான தோற்றத்தை படத்தின் கதாபாத்திரத்திற்காக அடியோடு மாற்றிக் கொண்டார். இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படம் தான் அதர்வாவின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று சொல்ல வேண்டும். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார். இதனைத் தொடர்ந்து ஈட்டி திரைப்படத்தில் ஒரு தடகள வீரராக நடித்து ரசிகர்களை கவர்ந்த அதர்வா 100 என்ற அதிரடி திரைப்படத்தில் ஆக்சன் ஹீரோவாக கலக்கியிருந்தார். இதனைத் தவிர இரும்பு குதிரை, சண்டிவீரன், இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம் என ஏராளமான திரைப்படங்களில் அதர்வா நடித்துள்ளார். இறுதியாக இவர் டி என் ஏ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இவர் பிஸியாக நடித்து வருகின்றார்.
![]()
இப்படியான நிலையில் அதர்வா சமீபத்தில் அளித்த பேட்டியில் அவருடைய திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அதர்வா, எனக்கு இப்போ என்ன வயசு ஆயிடுச்சு அதுக்குள்ள கல்யாணம் பண்ண சொல்றீங்க. நடக்க வேண்டிய நேரத்துல அது சரியா நடக்கும். திருமணம் பற்றி எனக்கு பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. அதனைப் போல தான் பொண்ணு பொண்ணா இருந்தா போதும். மற்றபடி எனக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லை. விரைவில் திருமண செய்தி வரும் என்று கூறியுள்ளார்.
