தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி வாழ்ந்து வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் தான் ஆர்யா- சயீஷா தம்பதியினர். நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
தற்பொழுது இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவின் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ‘கஜினிகாந்த்’ என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இத்தம்பதியினருக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்கள் குழந்தைக்கு ஆரியானா என்று பெயர் சூட்டியுள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்கள் நடிகர் ஆர்யா மற்றும் சயிஷா.
தற்பொழுது நடிகை சயீஷா தனது செல்ல மகளுக்கு முதன்முதலாக விமானத்தில் full ticket வாங்குவதாகவும், மும்பையிலிருந்து சென்னை செல்ல இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…
திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…
புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…