Categories: CINEMA

நடிகர் ஆர்யாவின் புகைப்படத்தை வெளியிட்டு.. அவரின் மாமியார் வெளியிட்ட பதிவு.. என்ன சொல்லிருக்காங்க தெரியுமா..?

நடிகர் ஆர்யா போலாந்து நாட்டில் நடைபெற்ற அயர்ன்மேன் டிரையத்லான் போட்டியில் கலந்து கொண்ட வீடியோவை பகிர்ந்து அவரின் மாமியார் புகழ்ந்து பேசி இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் இவர் தற்போது வரை முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றார். தான் ஏற்றுக்கொண்டு நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு பல அர்ப்பணிப்புகளை செய்யக்கூடியவர். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து புகழ்பெற்ற இவர் பல சர்ச்சைகளிடம் சிக்கி இருக்கின்றார்.

இவரை பார்ப்பவர்கள் எல்லாம் எப்போது கல்யாணம் என்று தான் கேட்பார்கள். ஒரு வழியாக அவர் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்த போது பழக்கம் ஏற்பட்ட பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் இருவரும் சேர்ந்து சினிமாவில் நடித்து வந்தார்கள் .இருவரும் இணைந்து காப்பான் மற்றும் டெடி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். பின்னர் இந்த தம்பதிகளுக்கு அழகாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை மற்றும் காதர் பாட்ஷா என்கின்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது.

நடிகை சாயிஷாவும் குழந்தை பெற்ற பிறகு உடல் எடையை குறைத்து பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர்கள் குடும்பமாக வெளியில் செல்லும் புகைப்படங்கள் அனைத்தையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா வெளியிட்டு வருவார்கள். நடிகர் ஆர்யா ஃபிட்னஸில் அதிக கவனம் உடையவர். அது மட்டும் இல்லாமல் சைக்கிளிங் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் .

வெளிநாட்டிற்கு சென்று அதிக சைக்கிளிங் போட்டிகளில் கலந்து கொள்வார். அந்த வகையில் போலந்து நாட்டில் நடைபெற்ற அயர்ன்மேன் டிரையத்லான் என்ற போட்டியில் கலந்து கொண்டிருந்தார். கடந்து சில மாதங்களுக்கு முன்பு அதற்கான ஜெர்சியை கூட நடிகர் சூர்யா வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் அந்த போட்டியில் நடிகர் ஆர்யா கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பகிர்ந்து அவரது மாமியார் அதாவது சாயிஷாவின் அம்மா புகழ்ந்து பேசி இருக்கின்றார். அவர் அதில் தெரிவித்திருந்ததாவது “எந்த ஒரு செயலையும் முழு அர்ப்பணிப்போடு குறை இல்லாமல் செய்து வருகின்றார். மகனாக, கணவனாக , மருமகனாக, தந்தையாக, நண்பனாக, விளையாட்டு வீரராக சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். அவர் ஒரு ஜென்டில்மேன். எனது ஒரே மகளை மணந்த ஆர்யா தற்போது தனக்கு மகனாகவும் சிறந்து விளங்கி வருகிறார்” என்று புகழ்ந்து பேசி இருந்தார்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

வெள்ளி விழா படங்களை கொடுத்தும்.. நடிகர் சிவகுமார் கடைசிவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

நடிகைகள் சிவகுமார் பிரபல நடிகராக இருந்தும் அவர் கடைசி வரை வாங்கிய சம்பளம் குறித்த தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

5 நிமிடங்கள் ago

என்னது இது ஆதி காலத்து பேரா இருக்கு.. இதெல்லாம் செட் ஆகாது.. பிரபல நடிகையின் பெயரை மாற்றிய எம்.ஆர்.ராதா..!!

நடிகை கே.ஆர் விஜயா சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி…

6 நிமிடங்கள் ago

திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம்.. அங்கு நடந்த சம்பவத்தை மெய்மறந்து பார்க்க நடிகை பிரியா ஆனந்த்.. வைரல் வீடியோ..!

நடிகை பிரியா ஆனந்த் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு படுகர் இன மக்கள் நடனமாடிய காட்சியை…

40 நிமிடங்கள் ago

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்த குழந்தையா இது..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே..

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்த குழந்தை சாரா அர்ஜுனின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ்…

1 மணி நேரம் ago

33 வயதில் குருவாயூர் கோயிலில் காதலனை கரம் பிடித்த மீரா நந்தன்.. வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் மலையாள மொழியில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மீரா நந்தன் இன்று காலை குருவாயூர் கோயிலில்…

2 மணி நேரங்கள் ago

மாணவர்களுக்கு தடபுடலாக நடிகர் விஜய் வைத்து விருந்து.. ஒரு வேலைக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவா..?

விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவ மாணவியர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்ட உணவுகளுக்காக மட்டும் 72 லட்சம் ரூபாய்…

3 மணி நேரங்கள் ago