தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக 1995ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய்.

இதைத்தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், துள்ளி திரிந்த வானம், கண்ணால் பேசவா, முத்தம், இயற்கை, தவம், வேதா என்று எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2012ல் தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தல அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக வில்லனாக அவதாரம் எடுத்தார்.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாகோ போன்ற மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார் அருண் விஜய். தற்பொழுது இவர் வணங்கான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் மிஷன் என்கிற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மிஷன் திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அருண் விஜய்யுடன் நடிகை எமி ஜாக்சனும் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் மிஷன், முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டு உள்ளது. மிஷன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அப்படம் வெற்றியடைய வேண்டி நடிகர் அருண் விஜய், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நடிகர் அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தியுடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஒட்டிய 14 கிலோமீட்டர் மலையை சுற்றி நேற்று இரவு தனது ரசிகர்கள் பட்டாளத்துடன் கிரிவலம் வந்தார். இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
நடிகர் அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தி மற்றும் ரசிகர்கள் பட்டாளத்துடன் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார்#Arunvijay #Tamilcinema #Tiruvannamalai @arunvijayno1 pic.twitter.com/eC43roRpYe
— Asianetnews Tamil (@AsianetNewsTM) August 4, 2023
