கிரேட் எஸ்கேப் ஆன சூர்யா.. அருண் விஜயை மொத்தமாக முடித்து விட்ட பாலா.. வணங்கான் படம் விமர்சனம் இதோ..!

By Nanthini on தை 10, 2025

Spread the love

பாலா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் வார். ஆரம்பத்தில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1999 ஆம் ஆண்டு “சேது” திரைப்படத்தை இயக்கியதான் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றது மற்றும் தமிழ்நாடு மற்றும் தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. அதன் மூலம் பிரபலமானார் பாலா.

   

பாலாவின் படங்கள் எதார்த்தமாகவும் எளிமையாகவும் ஆழமான கருத்துக்களை கூறுவதாகவும் இருக்கும். அதே போல் மக்கள் மனதை கலங்கடிக்கும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட கதைகளை தான் அவர் தேர்ந்தெடுத்து இயக்குவார். எந்த நடிகரும் பாலாவின் இயக்கத்தில் நடித்து விட்டால் அது திருப்புமுனையாக இருக்கும் என்று கூறுவர். ப்படி தற்போது பாலா அருண் விஜயை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் “வணங்கான்“.இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது. அதில் இதற்கு முன்பு பாலா படங்களில் பார்த்த போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் நினைவுக்கு வந்தன.

   

 

பிதாமகன் திரைப்படத்தில் விக்ரமை இன்ஸ்பெக்டர் பார்க்கும் அதே காட்சி நினைவுக்கு வந்தது. முன்பு போல தற்போது பாலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்று சொல்ல வேண்டும். இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள வணங்கான் படத்தை பார்த்த சிலர் ட்விட்டரில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதாவது நந்தா திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை முழு படமாக எடுத்து வைத்திருக்கிறார். அருண் விஜய் கதாபாத்திரம் பிதாமகன் படம் விக்ரம் போலவே உள்ளது. கதாநாயகியை சரியாக பயன்படுத்தவில்லை. படத்தின் முதல் பாதியில் கதையே இல்லை.

இரண்டாம் பாதி ஆவரேஜ் ஆக உள்ளது. மிஷ்கின் வேடம் படத்தில் நன்றாகவே அமைந்துள்ளது. திரைப்படத்தில் அதிக வன்முறை காட்சிகள் நிறைந்துள்ளன. திரைக்கதை பலவீனமாக தான் உள்ளது. படம் பிலோ ஆவரேஜ் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் நிலையில் விமர்சனங்களை பார்க்கும் போது இதற்கு முன்பு தான் இயக்கிய படங்களைப் போலவே பாலா வணங்கான் படத்தையும் இயக்கியுள்ளார் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இருந்தாலும் இன்று தான் படம் ரிலீஸ் என்பதால் முழுமையான விமர்சனங்கள் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.