பிரபல நடிகரான அருள்மணி தென்றல், அழகி, தாண்டவகோனே உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணசேத்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அருள்மணி அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆவார். நேற்று இரவு மாரடைப்பால் அருள்மணி உயிரிழந்தார்.

தேர்தலை முன்னிட்டு அதிமுகவுக்காக அருள்மணி பரப்புரை மேற்கொள்ள சென்றிருந்தார். சுமார் பத்து நாட்களாக வெளியூர் சென்றிருந்த அருள்மணி நேற்று சென்னைக்கு திரும்பி வந்து தனது வீட்டில் ஓய்வெடுத்தார். அப்போது மாலை 4:30 மணிக்கு அருள் மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி இரவு 9.30 மணிக்கு அருள்மணி உயிரிழந்தார். அவரது இறப்பை அறிந்த அரசியல் பிரமுகர்களும் சினிமா துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அருள்மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

சமீப காலமாகவே மாரடைப்பு காரணமாக மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. உணவு பழக்கம் முதல் பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் திரைத்துறையில் மட்டும் ஏராளமான முன்னணி மற்றும் இளம் பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

