Categories: சினிமா

பவுன்சர்களுடன் திவ்யாவின் வீட்டிற்கு சென்ற நடிகர் அர்னவ்… வீட்டிற்குள் விடாத திவ்யா… என்ன நடந்தது தெரியுமா?….

Spread the love

கன்னட சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். பின் கேளடி கண்மணி என்ற தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்து மகராசி, சன் டிவி-யின் செவ்வந்தி போன்ற தொடர்களில் நடித்தும் வருகிறார். ஏற்கனவே திவ்யாவிற்கு திருமணமாகி 5 வயது குழந்தை இருக்கும் நிலையில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார்.

அதன்பின் சீரியல் நடிகர் ஆர்னவ் என்பவரை காதலித்து வந்த திவ்யா அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். கேளடி கண்மணி சீரியலின் போது இருவருக்கும் 5 வருடங்களாக காதல் இருந்து வந்துள்ளது. இதன்பின் 5 வருடம் கழித்து காதல் அதிகரித்ததால் பாரம்பரியப்படி திருமணம் செய்து கொண்டதாக திவ்யா அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை கூறினார். இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார்.அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறினார்.

மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு திவ்யா ஒரு அழகான பெண் குழந்தையை சமீபத்தில் பெற்றெடுத்தார்.

இந்நிலையில் திடீரென்று அர்னவ் திவ்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை பார்த்த திவ்யா கதவை தாழ்பாள் போட்டுக் கொண்டு அர்னவ்வை வீட்டிற்குள் விடவில்லை. மேலும் சொல்லாமல் ஏன் வந்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பி, வழக்கறிஞரை சந்தித்து பேசிக்கொள்ளும்படி அவர்களிடம் வாக்குவாதம் செய்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது இதோ அந்த வைரல் வீடியோ….

Begam

Recent Posts

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

1 minute ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

4 minutes ago

விஜய்யோட பிள்ளைங்க வந்து “எங்க அப்பா பாத்துக்கலைன்னு குறை சொன்னாங்களா..?” பிரபல ஜோதிடர் ஓபன் டாக்..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…

4 minutes ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவுக்கு அதிர்ச்சி… சற்றுமுன் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…

40 minutes ago

“போலி ஆதார்… வாடகைக்கு தாத்தா… 80 லட்சத்தை அள்ளிய மோசடி கும்பல்!”… … வில்லங்க சான்று பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி

சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…

47 minutes ago

ஈரானை அதிரவைத்த மர்ம மனிதர் ‘M’ யார்?… 30 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை… ஒரே ஒரு விபத்து… உலகையே அதிரவைத்த பின்னணி…!

அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…

50 minutes ago