அடடே..! நம்ம “குட்டி தல” ஆத்விக்-ஆ இது.. அச்சு அசலாக அஜித் போலவே இருக்கும் மகன்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!!

By admin on புரட்டாதி 20, 2023

Spread the love

பிரபல நடிகரான அஜித்குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, தீனா, அமர்க்களம், பூவெல்லாம் உன் வாசம், பில்லா, அட்டகாசம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித்துக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரது திரைப்படங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி ஹிட் ஆனது. ரசிகர்கள் அஜித் குமாரை “தல”, “அல்டிமேட் ஸ்டார்”, “காதல் மன்னன்” என செல்லமாக அழைக்கின்றனர். பிரபல நடிகரான அஜித்தின் மகன் ஆத்விக்கின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

   

   

சின்ன பையனாக இருந்த ஆத்விக் பெரிய பையனாகி விட்டானே என ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்துள்ளனர். சிறுவயதில் அஜித் இருந்தது போலவே ஆத்விக்கும் அப்படியே அப்பாவை போல இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கால்பந்து அணியில் ஆத்விக் விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

 

இந்நிலையில் ஆத்விக் தனது அம்மா ஷாலினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம குட்டி தல ஆத்விக்-ஆ இது என கேட்டு ஆச்சரியப்படுகின்றனர்.