தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் பொங்கல் ரேசில் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட விடா முயற்சி திரைப்படம் கடைசி நேரத்தில் அதிலிருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து இந்த படம் இம்மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் அதன் அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு படங்களின் சூட்டிங் மற்றும் படப்பிடிப்பு என அடுத்தடுத்த வேலைகளை முடித்துக் கொடுத்து விட்ட அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்பதற்காக சென்று உள்ளார். முன்னதாக சிங்கப்பூரில் தன்னுடைய குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் தான் மட்டும் துபாய் சென்ற நிலையில் ஷாலினி உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் சென்னை திரும்பினார். இந்த நிலையில் ரேசில் பங்கேற்பதற்காக அடுத்தடுத்த பயிற்சிகளில் அஜித் ஈடுபட்ட வீடியோக்கள் வெளியானது.


Thank you note#ajithkumar #AjithKumarRacing #24hdubai #AKRacing #DubaiRaceWeekend #racing #414racing pic.twitter.com/RM8BY177wp
— Ajithkumar Racing (@Akracingoffl) January 15, 2025
