கடந்த சில நாட்களாகவே அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக உலா வந்து கொண்டிருக்கிறது. இறுதியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதி ரவிச்சந்திரன் உடன் அஜித் இணைய உள்ளார். இந்தப் படத்தை தயாரிக்க யாருமே முன்வரவில்லை என்றும் அதற்கு அஜித் போட்ட சில கண்டிஷன்கள் தான் காரணம் என்றும் செய்தி வெளியாகி இருந்தது.
அதாவது தயாரிப்பாளர்களிடம் அஜித் தரப்பிலிருந்து முன்பணமாக பெரும் தொகையை அஜித் கேட்பதாகவும் நீதி பணத்தை போஸ்ட் டேட்டட் செக்காக தரவேண்டும் என்றும் அஜித் கண்டிஷன் போட்டுள்ளார். அது மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும் உடனே அவருடைய சம்பளத்தை மொத்தமாக கொடுக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டு உள்ளாராம். இதில் முக்கியமான கண்டிஷன் என்னவென்றால் தயாரிப்பாளர்களிடமிருந்து வரும் சம்பளம் சென்னையில் உள்ள வங்கி கணக்குக்கு இல்லாமல் துபாயில் இருக்கும் அக்கவுண்டில் தான் செலுத்த வேண்டும் என்றும் அஜித் கூறியுள்ளார்.
அப்படி துபாய் அக்கவுண்டுக்கு இங்குள்ள தயாரிப்பாளர்கள் போடும் பட்சத்தில் அது தயாரிப்பாளர்களுக்கு தான் பெரிய பிரச்சனையாக அமையும் என்பதால்தான் அவர் படத்தை தயாரிக்க யாருமே ஆர்வம் காட்டவில்லையாம். இதனை அறிந்த சில தயாரிப்பாளர்கள் அஜித்துக்கு விஜய் மற்றும் ரஜினியை எவ்வளவோ பரவாயில்லை, தயாரிப்பாளர்களுக்கு எந்த கஷ்டமும் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் அவர்கள் ஏற்படுத்தி கொடுத்ததில்லை.
அஜித் மாதிரி இப்படி எல்லா நடிகர்களும் கண்டிஷன் போட மாட்டார்கள் என புலம்பி தள்ளுகிறார்கள். தற்போது ரஜினி கூலி திரைப்படத்திற்காக 120 கோடி சம்பளம் வாங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் பெரிய அளவில் போய்க்கொண்டு இருப்பதால் அதற்கு ரஜினி மட்டும் காரணமல்லாமல் லோகேஷ் கனகராஜூம் காரணம்தான். கூலி படத்தின் வியாபாரத்தை வைத்து ஜெயிலர் 2 படத்திற்கு ரஜினி 250 கோடி சம்பளம் கேட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…