தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் விடா முயற்சி. என்னதான் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வந்தாலும் விடாமுயற்சி எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதாக வந்த அறிவிப்பாள் அஜித் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே சென்றது.
படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படும் நிலையில் படம் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை. ஆனால் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி வெளியாகலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத காரணத்தால் இதுவும் தள்ளி போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி விடாமுயற்சி திரைப்படம் தாமதமாவது குறித்து பேசி உள்ளார். அதில், அஜித் இன்னும் டேட் கொடுக்காத காரணத்தால் தான் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அஜித் மட்டும் டேட் கொடுத்திருந்தால் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து பொங்கலுக்கு படம் வெளியாகும்.
ஆனால் அதற்கு அஜித் ஒத்து வரவில்லை. லைகா நிறுவனம் மற்றும் படக்குழு சொதப்பி வருவதாக தகவல் வெளியான நிலையில் அஜித் தான் டேட் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதில் தவறு அஜித் பக்கமும் உள்ளது. அது மட்டுமல்லாமல் துபாயில் சமீபத்தில் வீடு வாங்கிய அஜித் தற்போது லண்டனிலும் வீடு வாங்கியுள்ளதாக தெரிகிறது. லைகா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் லண்டனில் தான் உள்ளது. இப்படி இருக்கையில் அஜித் லண்டனில் வீடு வாங்கும் இடத்தில் லைகா ஒரு ஐடியா கொடுத்து சொதப்பியுள்ளது.
இதனால் தன்னை ஏமாற்றி விட்டதாக உணர்ந்த அஜித் லைகா நிறுவனம் இது கடும் கோபத்தில் உள்ளார். இதன் காரணமாகத்தான் விடாமுயற்சி படத்திற்கு டேட் கொடுக்காமல் அஜித் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். டாப் ஹீரோக்களை தக்க வைத்துக் கொள்ளாமல் லைகா நிறுவனம் இப்படி சொதப்பி வருவது அந்நிறுவனத்திற்கு பெரும் இழப்புதான். ஒருவழியாக அஜித்தை சமாதானப்படுத்தி விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…