ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை… இனி மாணவர்களிடம் இதை பேசக்கூடாது… தமிழகம் முழுவதும் பரந்த அதிரடி உத்தரவு…!

By Nanthini on புரட்டாதி 10, 2025

Spread the love

தமிழகத்தில் ஜாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் தூண்டும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. புகார்கள் உறுதியானால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை வாயிலாக, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, விபரங்கள் தே வை என்றால், மாணவர்களை தனியாக, தலைமை ஆசிரியர் அலுவலகத்துக்கு அழைத்து பேச வேண்டும். இந்த தகவல்களை பொதுவெளியில் பகிரக்கூடாது. மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரக்கூடாது.  மேலும் அனைத்து பள்ளிகளிலும் மகிழ் முற்றம் எனும் மாணவர் குழு அமைப்பை உருவாக்கவும் அரசு ஆணையிட்டுள்ளது.